Saturday, February 9, 2019

பாதை

அன்புள்ள ஜெ

மாமலரில் வரும் பெண்கோள்பெற்றி என்னும் அத்தியாயத்தை இந்த பகுதிகளுடன் சேர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன் மாமலரில் வரும் ஜெயக்த்ரதன் வேறு ஒருவனாக இருக்கிறான். திருட்டுத்தனமாக வந்து பெண்கவர்ந்துசெல்கிறான். வீரன் ஆனால் சிறுமதியாளன். அவனை பீமன் போட்டு மிதிக்கும்போது பரிதாபம் எழுந்தது. ஆனால் இங்கே வீரனாகவும் தன் பிழைகளை தானே உணர்ந்தவனாகவும் இருக்கிறான். தந்தையால் கைவிடப்பட்டவன், அல்லது தந்தையின் மிதமிஞ்சிய பாசத்தால் அழிக்கப்பட்ட குழந்தை அவன். அவனுக்கே எல்லாம் தெரிகிறது. ஆனால் இது குருசேத்திரம். இங்கே எல்லாவற்றையும் உணரலாம். ஒன்றும் செய்யமுடியாது. சாவுக்கான பாதை இது

பாஸ்கர்