Wednesday, February 13, 2019

அஸ்திரங்கள்



ஜெ

நான் மகாபாரதத்தின் வெவ்வேறு கதை வடிவங்களை வாசித்திருக்கிறேன். உபன்னியாசங்களையும் கேட்டிருக்கிறேன். ஆனால் எங்குமே அஸ்திரங்கள் என்பவை வெவ்வேறு மெய்ஞானங்கள், அர்ஜுனன் அடைந்தது அந்த ஞானங்களைத்தான் என வாசித்ததில்லை. பாசுபதம் கிடைக்கும்போது அதை உணர்ந்தேன். ஆனால் இப்போது கார்கடலில் வாசிக்கையில் அதை மேலும் நுட்பமாக உணர்ந்தேன். அந்தப்பட்டியலை வாசித்தபோது இது கற்பனையா என்று தோன்றியது. கலைக்களஞ்சியங்களைச் சென்று வாசித்துப்பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. அஸ்திரங்களின் பெயர்களாக இங்கே இதுவரை செயல்பட்ட எல்லா ஞானமார்க்கங்களின் பெயர்களும் காணப்பட்டன. இத்தனை ஆச்சரியமாக இதை உணர்ந்ததே இல்லை. நாம் வாசித்தது என்னவகையான மகாபாரதம் என்ர வியப்புதான் ஏற்பட்டது


டி.லட்சுமணன்