Tuesday, July 14, 2020

ஒரு வரி



மாமலரில் வரும் ஒரு வரியை நான் என் டைரியில் குறித்துவைத்தேன். அவ்வப்போது அதை வாசிப்பேன். 

எதுவாக இருந்தாலும் அறியாத ஒன்றை இங்கு நின்று எண்ணி எண்ணி விரித்தெடுத்து அச்சத்தை பெருக்கிக்கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை. வருவது வரட்டும். உயிரைப் போக்கிக்கொள்ளும் உரிமை நம்மிடம் இருக்கும் வரை நாமே ஏற்றுக்கொள்ளாத எத்துன்பமும் நமக்கு வருவதில்லை” 

இப்போது மிகச்சிக்கலான ஒரு காலம் வழியாக கடந்துசென்றுகொண்டிருக்கிறேன். ஆனால் துணிவு கூடவே இருக்கிறது. உண்மையில் மனம்தளராமல் நின்றதனால் பல சிக்கல்களிலிருந்து விடுபட்டேன். அதைப்பொலவே இங்கேயும் விடுபடுவேன் என நினைக்கிறேன். இந்த வரிக்காக ஒரு நன்றி 

ஆர்.எஸ்