Friday, July 24, 2020

வெண்முரசைப் புரிந்துகொள்ள...

அன்புள்ள ஜெ

வெண்முரசை எப்படிப்புரிந்துகொள்வது என்பது இனிமேல்தான் நிறைய கட்டுரைகளையும் கடிதங்களையும் வாசித்துப் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம். கொரோனா காலம் முடிந்தபின் அதற்கான பயிற்சிவகுப்புகளையோ கருத்தரங்குகளையோ ஏற்பாடு செய்யலாமென நினைக்கிறேன். குறிப்பாக இமைக்கணம் போன்ற நாவல்களை நாம் எளிதாகப்புரிந்துகொள்ள முடியாதென்று தோன்றுகிறது.

ஆனால் அதைவிடவும் கடினம் ஒட்டுமொத்தமாக கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்வது. வெண்முரசின் பிரம்மாண்டமே அதைப் புரிந்துகொள்வதைக் கடினமாக ஆக்குகிறது. உதாரணமாக துரியனை எடுத்துக்கொண்டால் அன்பான குழந்தை, இருளடைந்த கலியின்மைந்தன், நல்ல தந்தை, நல்ல அண்ணன், நல்ல ஆட்சியாளன், பெருந்தன்மையான மனிதன் என பலமுகங்கள் உள்ளன. அத்தனை முகங்களையும் இணைத்துப் புரிந்துகொள்வது மிகப்பெரிய சவால்.

ராஜேந்திரன்