Monday, July 27, 2020

நீலம் வாசிப்பு


அன்புள்ள ஜெ

நீலம் நாவலை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். கண்ணனின் பிள்ளைத்தமிழ் நேராக அங்கேகொண்டுதான் விட்டது. அற்புதமான கவித்துவமான ஒரு நாவல். முன்பு இந்நாவலை நான் வாசிக்கவில்லை. அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதோடு மகாபாரதத்தின் கதையோட்டம் மீது எனக்கு மிகப்பெரிய ஈடுபாடு இருந்தது. அதைத்தான் எதிர்பார்த்தேன். கம்சன் தேவகி வசுதேவர் கதையை ஒரு அடர்த்தியான மொழியால் அழித்துவிட்டீர்கள் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. ஆகவே அதை தவிர்த்தேன். இன்றைக்கு வாசிக்கும் போது ஒவ்வொரு வரியும் நேர்த்தியாக எண்ணி எண்ணி செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறேன். நான் வாசித்தவரை நவீனத்தமிழிலக்கியத்தில் நீலம் நாவலுக்கு சமானமான ஒரு படைப்பு இல்லை. இதுதான் உச்சமான படைப்பு

சித்ரா