அன்புள்ள ஜெ
மானசாதேவி அன்னைக்கான கோயில்கள் இந்தியா முழுக்கவே
இருந்துள்ளன.ஹரித்வாரில் உள்ள கோயில் மிகப்பெரியதும் பழையதுமாகும். கிருஷ்ணையின் கரையிலிருந்து
இமையமலை வரை மானசாதேவிக்கு கோயில் இருக்கிறது. மானசாதேவி எப்படி தெய்வமாக ஆனாள் என்பதைச்
சித்தரிக்கும் அற்புதமான ஒரு பெரிய கதை என்று வெண்முரசைச் சொல்லலாம். மானசாதேவியில்
தொடங்கி மானசாதேவியில் முடிகிறது. நாகர்குலத்து அன்னை இந்துக்கள் அனைவருக்கும் தெய்வமாக
ஆனதன் கதைதான் வெண்முரசிலே வருவது என நினைக்கிறேன்.காலப்போக்கில் மானசாதேவி சாக்தவழிபாட்டு முறைக்குள் சென்று துர்க்கையின் வடிவமாக மாறிவிட்டாள்.
ஜெயக்குமார்