வெண்முரசின் சாராம்சமான பகுதி என நீலம் நாவலை ஒருவர் எழுதியிருந்தார். என் வாசிப்பில் இமைக்கணமே வெண்முரசின் சாராம்சமான பகுதி. அது ஒரு தனிநூல். அதற்கும் வெண்முரசுக்கும் நேரடி உறவு இல்லை. அதோடு ஒரு சுவராசியமான விஷயம், வெண்முரசு முடிந்தபின் அது இப்படி முடியாமல் இருந்திருந்தால் எப்படி முடிந்திருக்கும் என்று ஊகிக்கக்கூடிய இடங்கள் கொண்டது இமைக்கணம்
மகாபாரதத்தின்
சாராம்சமே கீதைதான். அதுதான் ஐந்தாம்வேதம். அதை முன்வைக்கும் பகுதி இமைக்கணம். அதில்
இறந்தவர்களெல்லாம் எழுந்து வருவதைக் காணலாம். அந்த உயிர்த்தெழுதலில் என்ன நடக்கிறது
என்பது ஒரு பெரிய வாசிப்பனுபவம். மொத்த வெண்முரசும் நினைவில் எழுவது இமைக்கணம் வாசிக்கும்போதுதான்
கடைசியாக ஒன்று
சொல்லவேண்டும். மகாபாரதக்கதையை இமைக்கணக்காட்டில் வைத்துத்தான் சூததேவர் சொல்கிறார்.
ஆகவே மகாபாரதத்தின் முன்னால் ஒலித்த வேதம்தான் கீதை என இமைக்கணம் நாவலில் உள்ளது. இமைக்கணம்
வெண்முரசில் கடைசிநாவலாக அமைந்திருந்தாலும் பொருத்தமாக அமைந்திருக்கும்
செல்வக்குமார்