சமீபத்தில் வெண்முரசு பயில ஆரம்பித்துள்ளேன். சில வார்த்தைகள் மிகக் கடினமாய் உள்னன. அத்தகைய சொற்களில் பலவற்றிற்கு Tamil Virtual Academy இன் மின்நிகண்டிலும் பதம் கிடைப்பதில்லை. சில சொற்களை Google இல் இட்டுத் தேடினால், ஏதாவதொரு பழம்பாடலுக்கோ அல்லது உங்கள் தளத்திற்கோ தான் செல்கிறது. தமிழின் ஒரு மகத்தான படைப்பை எழுதியுள்ள ஒரு எழுத்தாளனிடம், அவற்றை எளிதில் பதம் பார்த்து படிப்பதற்கு ஒருவழியும் கேட்பது அபத்தம் எனப் புரிகிறது. இருந்தும் வேறு வழி தெரியாததால் கேட்கிறேன். பொறுத்தருள்க!
நன்றியுடன்,
அன்பன்.
சுந்தர மகாலிங்கம்
அன்புள்ள சுந்தரமகாலிங்கம்
வெண்முரசின் சொற்கள் அந்த நூலின் கதைப்போக்கில் இயல்பாகப்புரிந்துகொள்ளப்படலாம்.
அச்சுநூல்களில் பின்னிணைப்பாக அகராதி உள்ளது. இணைய அகராதி ஒன்றை உருவாக்க எண்ணமுண்டு
ஜெ