அன்புள்ள ஜெ
வெண்முரசில் ஒரு சிறு பகுதி எப்போதுமே மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
அது கதைக்கு இன்னொரு அழகையும் அர்த்ததையும் சேர்க்கிறது. சுகோத்ரனின் கதாபாத்திரம்
அத்தகையது. பாண்டவர்களில் ஒரு துளிகூட எஞ்சவில்லை- ஆனால் சுகோத்ரன் எஞ்சுகிறான். அவன்
தன்னை இல்லை என்று ஆக்கிக்கொள்கிறான். அவன் தன்னை அக்னியுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும்
இடம் அவனுடைய உள்ளத்தை காட்டுகிறது.
அவனுடைய சகோதரர்களை எரித்தழித்த
அக்னியை அவன் தெய்வமாக அறியும் இடத்தில் அவன் விடுபட்டுவிட்டான். இனி அவனால் அரசனாக
அமர முடியாது.
மகாதேவன்