Tuesday, July 14, 2020

களிற்றியானைநிரை



அன்புள்ள ஜெ, 

நலம்தானே? 

வெண்முரசை போருக்குப்பின்னால் ஆர்வமாக வாசிக்கமுடியாது என்ற எண்ணம் எனக்கிருந்தது. போருக்குப்பின்னால் என்ன கதை இருக்கப்போகிறது என்றும் நினைத்திருந்தேன். மூலமகாபாரதத்தில் முழுக்கமுழுக்க திக்விஜயங்களின் பட்டியலும் நீண்டநீண்ட நீதிநூல்களும்தான் உள்ளன. அவற்றில் பல நீதிநூல்களின் உள்ளடக்கம் இன்றைய வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாதது. 

ஆனால் என்ன நடந்தது என்றால் போருக்குப்பின் என் வாசிப்பு இன்னமும் கூர்மையானதாக மாறியது. ஏனென்றால் போரின் நினைவுகள் சோர்வுகள் எல்லாவற்றிலிருந்தும் அது வெளியே கொண்டுபோயிற்று. புதிய ஒரு உற்சாகத்தை அளித்தது. அதோடு புதிய புதிய வாசிப்புகளையும் உருவாக்கியது. 

களிற்றியானைநிரை ஒரு பெரிய ஹைப்பர் டெக்ஸ்ட். அது முழுக்கமுழுக்க அதற்கு முன்னாலிருந்த இருபத்துநாலு நாவல்களைச் சுட்டிக்கொண்டே செல்கிறது.. ஆகவே மிகவும் அடர்த்தியானதாக ஆகிவிட்டிருந்தது. களிற்றியானைநிரை எனக்கு அளித்தது ஓர் அமைதி. அதற்கு முன்னாலிருந்த கொந்தளிப்பு முழுக்க இல்லாமலாகி நான் மீண்டு வந்தேன். அந்நாவலைத்தான் வெண்முரசின் உச்சம் என்று சொல்வேன்

 

எம்.ராகவேந்தர்