அன்புள்ள ஜெ
கணிகரின் கதாபாத்திரம் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். வெண்முரசில்
கணிகர் தோன்றுவதற்கு முன்பு கிருஷ்ணனின் கதாபாத்திரத்திலேயே அந்த Pure Evil இருந்துகொண்டிருந்தது.
நீலம் நாவலின் இறுதியிலேயே குருதியில் நடந்துபோகும் அவனுடைய சித்திரம் வந்துவிட்டது.
மதுராவை தாக்கும்போது இனிப்பை சுவைத்தபடியே கொன்று குவிக்கிறான். அவனிடமிருந்த அந்த
தீமைதான் கணிகராக திரண்டு வந்து சகுனியை தேர்வுசெய்தது. நாவலில் கணிகர் தோன்றுமிடம்தான்
சகுனியில் Evil தோன்றுமிடம். அதன்பிறகுதான் அவன் அழிவுச்சக்தியாக
உருமாறுகிறான். அந்த Pure Evil தன் பணியை
முடித்துவிட்டு அவனிடமே சென்று குடியேறுகிறது. வேடர்கள் அம்பு எய்தது அந்த Pure Evil மீது. கொன்றது
கண்ணனை. அம்பெய்தவர்கள் ஏகலைவனின் வழி வந்தவர்கள். அவர்களை அழித்தது அந்த Pure Evil தான்.
மகாதேவன்