உய்ய உலகுபடைத் துண்ட மணிவயிறா!. /
ஊழிதோறூழி பல ஆலினிலை யதன்மேல்//
பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே!. /
பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே!. //
செய்யவள் நின்னகலம் சேமமெனக் கருதிச்/
செல்வு பொலி மகரக் காது திகழ்ந்திலக//
ஐய!. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை/
ஆயர்கள் போரேறே!. ஆடுக ஆடுகவே. 1.5.1.
65:
கோளரியின் னுருவங்கொண்டு அவுணனுடலம்/
குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்!. //
மீளஅவன் மகனை மெய்ம்மை கொளக்கருதி/
மேலை யமரர் பதிமிக்கு வெகுண்டுவர//
காளநன் மேகமவை கல்லொடு கால் பொழியக்/
கருதிவரைக் குடையாக் காலிகள் காப்பவனே!. //
ஆள!. எனக்கு ஒருகால்ஆடுக செங்கீரை/
ஆயர்கள் போரேறே!. ஆடுக ஆடுகவே. 1.5.2.
66:
நம்முடை நாயகனே!. நான்மறையின் பொருளே!. /
நாவியுள் நற்கமல நான்முகனுக்கு// ஒருகால்
தம்மனை யானவனே!. தரணி தலமுழுதும்/
தாரகை யின்னுலகும் தடவி அதன் புறமும்//
விம்ம வளர்ந்தவனே!. வேழமும் ஏழ்விடையும்/
விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!. //
அம்ம!. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை /
ஆயர்கள் போரேறே!. ஆடுக ஆடுகவே. 1.5.3.
67:
வானவர் தாம் மகிழ வன் சகடமுருள /
வஞ்சமுலைப் பேயின் நஞ்சமது உண்டவனே!. //
கானக வல்விளவின் காயுதிரக் கருதிக்/
கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே!. //
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்/
என்பவர் தாம்மடியச் செருவதிரச் செல்லும்//
ஆனை!. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை/
ஆயர்கள் போரேறே!. ஆடுக ஆடுகவே. 1.5.4.
68:
மத்தளவும் தயிரும் வார்குழல் நன்மடவார்/
வைத்தன நெய்களவால் வாரி விழுங்கி// ஒருங்கு
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை/
ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!. //
முத்தினிள முறுவல் முற்ற வருவதன் முன்/
முன்ன முகத்தணியார் மொய்குழல் களலைய //
அத்த!. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை/
ஆயர்கள் போரேறே!. ஆடுக ஆடுகவே. 1.5.5.
69:
காய மலர் நிறவா!. கரு முகில் போலுருவா!. /
கானக மா மடுவில் காளிய னுச்சியிலே//
தூயநடம் பயிலும் சுந்தர என்சிறுவா!. /
துங்கமதக் கரியின் கொம்பு பறித்தவனே!. //
ஆயமறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை /
அந்தரமின்றி யழித்தாடிய தாளிணையாய்!. //
ஆய!. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை/
ஆயர்கள் போரேறே!. ஆடுக ஆடுகவே. 1.5.6.
70:
துப்புடையயார்கள் தம்சொல் வழுவாது ஒருகால்/
தூய கருங்குழல் நல்தோகை மயிலனைய//
நப்பினைதன் திறமா நல்விடையே ழவிய/
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே!. //
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்/
தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய// என்
அப்ப!. எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை/
ஆயர்கள் போரேறே!. ஆடுக ஆடுகவே. 1.5.7.
71:
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமிழ் மருவி/
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்//
கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்/
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்கு அருளி//
மன்னுகுறுங்குடியாய்!. வெள்ளறையாய்!. / மதிள்சூழ்
சோலை மலைக்கரசே!. கண்ணபுரத்தமுதே!. //
என் அவலம் களைவாய்!. ஆடுக செங்கீரை/
ஏழுலகும் முடையாய்!. ஆடுக ஆடுகவே. 1.5.8.
72:
பாலொடு நெய்தயிர் ஒண்சாந்தொடு சண்பகமும்/
பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறிவர//
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்/
கோமள வெள்ளிமுளைப் போல் சில பல்லிலக//
நீலநிறத்தழ காரைம்படையின் நடுவே/
நின் கனிவாயமுதம் இற்று முறிந்து விழ//
ஏலு மறைப்பொருளே!. ஆடுக செங்கீரை/
ஏழுலகும் முடையாய்!. ஆடுக ஆடுகவே. 1.5.9.
73:
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில்/
சேர்திகழாழிகளும் கிண்கிணியும்// அரையில்
தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின்/
பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்//
மங்கலஐம்படையும் தோல்வளையும் குழையும்/
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக//
எங்கள் குடிக்கரசே!. ஆடுக செங்கீரை/
ஏழுலகும் முடையாய்!. ஆடுக ஆடுகவே. 1.5.10.
74:
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்/
ஆமையு மானவனே!. ஆயர்கள் நாயகனே!. //
என் அவலம் களைவாய்!. ஆடுக செங்கீரை/
ஏழுலகும் முடையாய்!. ஆடுக வாடுகவென்று//
அன்னநடை மடவாள் அசோதை யுகந்தபரிசு/
ஆனபுகழ்ப் புதுவைப் பட்டனுரைத்த தமிழ்//
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார்/ உலகில்
எண்திசையும் புகழ்மிக்கு இன்ப மதெய்துவரே. 1.5.11.