Friday, July 24, 2020

வெண்முரசின் வழியாக சென்றடைவது என்ன?


அன்புள்ள ஜெ

நலம்தானே?

வெண்முரசின் வழியாக சென்றடைவது என்ன என்ற கேள்வி எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது. உண்மை, புதியவேதம் எழுந்து பாரதத்தின் மாபெரும் இனக்குழுப்போர் முடிவுக்கு வந்தது கிருஷ்ணனால்தான் என்பது தெரிகிறது. வரலாற்றில் கிருஷ்ணனின் இடம் என்பது

1.   இனக்குழுக்களின் தொகுப்பாளன்

2.   தத்துவங்களின் தொகுப்பாளன்

3.   அனைத்துக்கும் பொதுவான ஓர் தொன்மம்

என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கிருஷ்ணன் வந்துதான் நீண்ட மரபில் என்றுமிருந்த இனக்குழுச்சண்டையை ஒழித்தான். இந்துமதம் அனைத்தையும் உள்ளிழுக்கும் மதமாக ஆகியது. அசுரதெய்வங்களும் நாகதெய்வங்களும் உள்ளே வந்தன. அனைத்தையும் இணைக்கும் தத்துவமாக அதாவது யோக[ இணைப்பு] ஞானமாக கீதை உருவானது. கீதை ஒரு மாபெரும் தொகுப்புத்தத்துவம்.அப்படி உருவானதும் கிருஷ்ணன் அனைத்துக்கும் பொதுவான ஐக்கான் ஆக மாறினான்

ஆனால் ஆன்மிகமாக ஒரு சாதகனுக்கு இந்நூல் அளிப்பது என்ன? அது முக்கியமான ஒரு கேள்வி என்று தோன்றுகிறது

ஆர்.ராஜகோபால்