Wednesday, July 15, 2020

கணிகர்

அன்புள்ள ஜெ

கணிகரின் கதாபாத்திரத்தின் முடிவு ஆச்சரியமளிக்கக்கூடியது. அந்தக்கதாபாத்திரத்தின் யுனீக்னெஸ் பற்றி நான் நிறைய யோசித்தது உண்டு. அது ஒரு விசித்திரமான கதாபாத்திரம் என்று மட்டும்தான் யோசித்தேனே ஒழிய அதை இப்படி நினைக்கவில்லை. ஆனால் அது இப்படி முடிந்தபோது உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருந்தது. இப்போது பார்த்தால் அது அப்படித்தானே இருக்கமுடியும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. கண்ணனின் லீலையாகவே ஆக்கம்  இருந்தால் அழிவும் இருக்கமுடியும்? அவனிடமிருக்கும் ஒருதுளி கறையே கணிகராக ஆகியது. அவன் குடியையும் கடைசியில் அவனையேகூட அழித்தது. அவருடைய அந்த ‘நிர்மலமான’ தீய தன்மையும் தெய்வீகமானதுதான். ஆக்கமும் அழிவும் கண்ணனேதான். கீதையில் அவன் சொல்வதும் அதைத்தான்

சுவாமி