அன்புள்ள ஜெ,
காந்தாரி என்னும்
பேரன்னை பற்றிய கடிதம் வாசித்தேன். அந்தக் குணச்சித்திரம் மகாபாரதத்தில் இல்லை என சாரதா
எழுதியிருந்தார். மகாபாரதத்தில் அந்த குணச்சித்திரம்தான் உண்மையில் இருக்கிறது. ஆரம்பகாலக்
கதையோட்டத்தை வாசித்தால் அப்படித் தோன்றாது. நாடகங்களில் காந்தாரி பொறாமைபிடித்தவளாகக்
காட்டப்பட்டிருப்பாள். ஆனால் ஸ்திரீபர்வம் காந்தாரிக்காகவே எழுதப்பட்டுள்ளது. அது ஏன்
எழுதப்பட்டது என்று யோசித்தாலே காந்தாரி ஏன் முக்கியமான கதாபாத்திரம் என்று தெரியும்.
காந்தாரியை பேரன்னையாகத்தான் மகாபாரதம் பார்த்திருக்கிரது
என்று தெரியும்.
சாந்தகுமார்