மானுடர் இயல்பு போலும் அது, தாங்கள் எய்துவதெல்லாம் தங்களால்தான் என்பவர்கள் தாங்கள் இழந்தவற்றுக்கு தெய்வங்களை பொறுப்பாக்குவார்கள்
என்ற வரியை வாசித்தபோது ஆமாம்
என்று தோன்றியது. அது ஒரு பெரிய தப்பு நாமே நமக்குச் செய்துகொள்ளும் மோசடி என்று தோன்றியது.
ஆனால் அடுத்தவரி
எல்லாப் பழியையும் தெய்வங்கள் மீது போடுவதும் ஒரு உளவிரிவே. இப்புவியில் நிகழும் ஒவ்வொன்றுக்கும் தெய்வங்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அறத்திற்கும் மறத்திற்கும், அழிவிற்கும் ஆக்கத்திற்கும்
என்பதை வாசித்தபோது ஒருகணம்
ஒன்றும் புரியவில்லை. புரிந்ததும் கண்ணீர் வருமளவுக்கு ஒரு நெகிழ்வை அடைந்தேன். அது
கள்ளமில்லாமையால் வரும் ஒரு முதிர்ச்சிதான் என்று புரிந்துகொண்டேன். கிருஷ்ணார்ப்பணம்
என என் தாத்தா சொல்வார். அந்த சொல்லின் தாத்பரியம் புரிந்தது
ஸ்ரீனிவாசன்