அன்புள்ள ஜெ,
கோழைகளைப் பற்றிய
கடிதங்களை வாசித்தேன். எனக்கு உடனடியாக ஞபாகம் வந்தது தக்கிகள்தான். தக்கர்கள் என்றும்
சொல்லப்படுகிறது. இவர்களெல்லாம் பழைய முகலாயர் படைகளிலும் ராஜபுத் படைகளிலும் இருந்த
படைவீரர்கள். சத்ரியர்கள். ஆனால் பிரிட்டிஷார் அவர்களின் அரசர்களைத் தோற்கடித்தபின்
இவர்கள் உதிரிப்படைவீரர்களாக ஆனார்கள். அனைவரும் கொடூரமான கொள்ளைக்காரர்களாக ஆகிவிட்டார்கள்.
அவர்களை சுல்லிவன் என்னும் பிரிட்டிஷ் அதிகாரி கண்டடைந்து அழித்தகதையை வாசித்திருக்கிறேன்.
இவர்களைக் கொன்றே ஆகவேண்டும். வேறுவழி இல்லை. ஏனென்றால் போரில் மிஞ்சியவர்கள் ஒருவகையான
கசடுகள்போல. அவர்கள் கீழானவர்கள். அவர்கள் எஞ்சியதே கோழைத்தனத்தால்தான். நான் தக்கிகளைப்பற்றி
வாசிக்கையில் எப்படி போர்வீரர்கள் இப்படி ஆனார்கள் என எண்ணியிருக்கிறேன். வெண்முரசு
அதற்கான விடையை அளித்தது
செல்வக்குமார்