அன்புள்ள ஜெ,
மயானருத்ரர்களின்
கொடிய நடனம் என்று ஒரு கடிதம் வந்தது [இந்தக் கடிதப்பகுதியில் பல விஷயங்களை வாசிக்கையில்தான்
உண்மையில் இவ்வளவு வாசிப்பதற்கு இருக்கிறது வெண்முரசிலே என்ற எண்ணம் ஏற்படுகிறது] அந்த
இடம் குரூரமானது. ஆனால் அந்தப் பின்புலமும் முக்கியமானது என நினைக்கிறேன். அங்கே காந்தாரியின்
குடியே மிச்சமில்லாமல் அழிந்துகொண்டிருக்கிறது. அப்போதுதான் அவளுடைய குடியை அழித்தவர்களின்
குடியின் அழிவுச்செய்தி வருகிறது. அவள் என் குடி என்றே அக்குழந்தைகளையும் சொல்கிறாள்.
அவர்களையும் சேர்த்தே நினைத்து அலறி அழுகிறாள். எல்லாக்குழந்தையையும் தன் குழந்தையாகவே
நினைக்கிறாள்
சங்கர்