ஜெ
குருக்ஷேத்திரப்போரை வெண்முரசு
சித்தரிப்பதை இப்படிச் சுருக்கமாகப் புரிந்துகொள்ளமுடியும். மனிதர்களாக களத்துக்கு
வந்தார்கள். புழுக்களாகச் செத்தார்கள். ஆனால் வெண்முரசு புழுக்களை ப்போல மனிதர்கள்
இருப்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
பெருந்திரளென இருக்கையிலும், பெருந்திரளென்றிருக்கையில் மட்டுமே பொருள் கொள்ளும் உடல் கொண்டிருக்கையிலும், திரளிலிருக்கிறோம் என்று அறியாத உயிர்த்துளியே புழு
என்றவரி மேலும் ஆழமானது. புழுக்களை
ஒருவகை கூட்டான உயிர்களாக வெண்முரசு காட்டுகிறது. கடைசியில் போர்க்களத்தில் நிகழ்வது
புழுக்களின் அலை மட்டும்தான்
ராம்குமார்