Wednesday, September 4, 2019

குழந்தை திரௌபதி



சொல்லுக்குச் சொல் வைக்கும் குழந்தையைப்போல கொடிய எதிரி வேறில்லை. நம்மிடமிருந்து ஒரு துளியையும் அவள் பெற்றுக்கொள்வதில்லை. அவளிடமிருந்து நாம் பதற்றத்தையும் துயரையும் மட்டுமே பெற்றுக்கொள்கிறோம்-

வெண்முரசில் இருந்து எடுத்த இந்த வரியை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். இது ஒரு சூத்திரம் போல தோன்றுகிறது. அபிமன்யூவோ பாஞ்சாலியோ ஒரு அசாதாரணமான ஆளுமை குழந்தையாக இருக்கும்போது டிஃபிகல்ட் சைல்ட் ஆகத்தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன். ஒன்றுமே செய்யமுடியாது. பலசமயம் நம் பொறுமையே இல்லாமலாகிவிடும். ஆனாலும் நாம் காத்திருந்தாகவேண்டும். பொறுமையாக கடந்துசெல்லவேண்டும். எனக்கே நான் சொல்லிக்கொள்ளவேண்டியது இது

எஸ்