// நகரங்கள் எழுந்து பொலிந்து போரிட்டு புழுதியாகி மறைந்தன. மக்கள்திரள்கள் பிறந்து குடிதிரட்டி முறைமையாகி வழக்கமாகி சொல்லாகி நூலாகி நூல்நிறை சொல்லை மட்டுமே எஞ்சவிட்டு நினைவாகி அழிந்தன. துளி ஒவ்வொன்றும் ஒரு புவி. ஒவ்வொன்றும் ஒரு கணம். கணங்களைக் கோத்து உருவாக்கப்பட்ட விமணிமாலை. கோக்கும் சரடென்பது அவை ஒன்றை ஒன்று ஈர்த்திருக்கும் விசை. சென்று கொண்டிருந்தது விழிகளின் காலம். அறிவிழிகள். அறியாமின்கள். நுண்சொற்கள். அமைதிச்செறிவுகள். விண்மீன்களின் நீள்சரடு என ஆகிய வானம். ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு சென்றுகொண்டிருந்த பொருளின்மை. ஒன்று மற்றொன்றிடம் கொள்ளும் பொருள். //
மந்திரம் என்பது இப்படி வந்து மோதுவதுதான் போலும். இந்த ஒரு பத்தியை மீள மீள வாசித்துக்கொண்டிருந்தாலே போதுமென்றிருக்கிறது.
ஸ்ரீனிவாசன்