Thursday, March 16, 2017

விரிவாக்கம்






மஹாபாரத்தை - ராஜாஜி எழுதிய ஆங்கில நூல் பள்ளி நாட்களிலேயே படித்திருக்கிறேன், ராமகிருஷ்ண மடத்தின் ஒரு நூலில் தமிழிலும் வாசித்திருக்கிறேன், உபன்யாசங்களில் பலமுறை கேட்டிருக்கிறேன், தொலைக்காட்சியில் நாடகமாக பார்த்திருக்கிறேன், வலியின் பாண்டவர் பூமி விகடனில் வாசித்திருக்கிறேன் -  பகவாதமும் , தேவி பகவாதமும் தனியாக  தமிழில் வாசித்திருக்கிறேன் எப்போதும் அதை அஞ்சியதில்லை. அது எனக்கு புதிய கதையே அல்ல. நம் நாட்டில் பலர் என்னைபோல இருப்பார்கள்.

அந்த தைரியத்தில்தான் வெண்முரசை தொடங்கினேன். விஷ்ணுபுரமெல்லாம் பிறகு பார்தோக்கொள்ளலாம் என்ற எண்ணம். ஆனால் இப்போதே  நான் நினைத்தது ஒன்று நடப்பது வேறொன்றாக இருக்கிறது. சில சமயம் என் முகத்தையே கண்ணாடியில் உற்று பார்த்தால் எனக்கே பயமாக இருக்கும் அப்படி உணருகிறேன் (நான் அதனை அசிங்கமானவன் அல்ல ). தெரிந்த கதைதான் அனால் மிக நெருங்கி பார்த்தால் வேறு எதோ ஆகிறதோ ?

கணேஷ்

அன்புள்ள கணேஷ்

மகாபாரதம் நாம் அறிந்த கதை – கதைச்சரடு. எல்லாக்கதைகளையும் மூன்று கோணங்களில் வாசிக்கலாம்.வரலாறாக. தொன்மக்களஞ்சியமாக, சமகால வாழ்க்கையுடனான உரையாடலாக. நாம் அதை பெரும்பாலும் அப்படிவாசித்திருப்பதில்லை. வெண்முரசு அதை அந்தந்தத் தளங்களில் விரிவாக்கம் செய்கிறது. அதுதான் அது எழுதப்படுவதற்கான நோக்கமே

ஜெ