Friday, March 17, 2017

போர் நுணுக்கங்கள்







 இன்றைய வெண்முரசில் நகுஷனுக்கும் ஹூண்டனுக்குமான போர்  எத்தனை ஆழமாக விவரிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு முன்னரும் பல போர்கள் மிக விரிவாக வே சொல்லப்பட்டிருக்கிறது எனினும் இந்த முறை ஒரு முதியவரும் இளைஞனுமாக நமக்கு போரின் உளவியலை சொல்கிறார்கள். .  போருக்கும் வேட்டைக்குமான வித்தியாசம், வெற்றி பெறுவோமெனெ எண்ணும் இருதரப்பின் நிலைப்பாடு,படை சூழ்தலின் வகைகள்,. கொடி அசைப்பதும் கொம்பு ஊதலும் , படை நகர்தலுமாக  போர்க்களம் கண்முன்னே இருக்கிறது வாசிக்கையில்.
 
எத்தனை எத்தனை போர் நுணுக்கங்கள் இந்த ஒரு பகுதியிலேயே? உண்மையாகவே இந்த போர் எண்ணங்களால் நிகழ்ந்ததுதான் இறுதியில் காட்டுமுறையிலான நகுஷனுக்கும் ஹூண்டனுக்குமான  தனிப்போரின் போது அந்த காட்சி அப்படியே கண்முன்னே விரிந்து நடந்த்து கொண்டிருந்த்தது. அப்படி துல்லியமான விவரிப்பு. இறுதியில் ஹுண்டனின் கழுத்தைப் பற்றி அவன்  கழுத்தெலும்பை மேல்நோக்கி நகுஷன் உடைத்ததை வாசிக்கையில் என்னை அறியாமல் திரைப்படம் பார்க்கும் உணர்வில் அவசரமாக வேறுபுறமாக முகத்தை திருப்பிக்கொண்டேன்.

//
இருவருக்கும் நடுவே இருந்தவர்கள் ஊதப்பட்ட மாவு என விலகி முற்றமொன்றை அமைத்தனர். மெல்ல படைகள் இணைந்து சூழ்ந்து ஒரு பெரும் வளையமொன்று அமைந்தது. முகங்களாலான சுவர் என அது எழுந்தது. //


 இது போல முன்பும் சிசுபாலனுக்கும் இளைய யாதவருக்குமான ராஜசூயப்பந்தலின் அருகேயான போரிலும் முகங்களால் ஆன  கரையொன்றை பார்வையாளர்கள் அமைத்ததை சொல்லி இருக்கிறார்.

கோமதி ஆற்றின் கரையின் குடிலில் குரங்குகள் தாலமொன்று விழுந்த்ததும் தூசி பரவுவதைப்போல விலகி நின்றதையும் இந்த வரிகள் நினைவூட்டியது
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
லோகமாதேவி