Tuesday, March 21, 2017

பிரம்மத்தின் ஆணை






ஜெ

சட்டென்று ஒரு பத்தி வெண்முரசில் ஒரு முழுக்கதை அளவுக்கே யோசிக்கவைக்கும்.
1தன் அறிதலில் ஒரு பகுதியை ஒருபோதும் குரு மாணவனுக்கு அளிப்பதில்லை.
2தனக்கு இறுதித்துளி அறிவு அளிக்கப்படவில்லை என்று அறியாத மாணவனும் இல்லை.
3தான் அறிந்தவற்றிலிருந்து அவ்வறியாத பகுதியை கற்கும்பொருட்டு கற்பனையையும் அறிவையும் ஆழத்தையும் கூர்தீட்டிச் செலுத்தி தன் ஆசிரியன் அறியாத பிறிதொன்றை அவன் சென்றடைகிறான்.
4 ஆசிரியனை மாணவன் கடந்து சென்றாகவேண்டும் என்பது இப்புவி வாழவேண்டுமென்று எண்ணும் பிரம்மத்தின் ஆணை

இந்த ஒரு பத்தியில் ராமானுஜருக்கும் யமுனாச்சாரியாருக்கும் இடையில் உள்ள உறவைப்புரிந்துகொள்ளும் கீ உள்ளது. இதையே தோதாத்ரிக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சருக்குமான உறவைப்புரிந்துகொள்வதாகவும் ஆக்கிக்கொள்ளலாம். இது குரு சிஷ்ய மரபில் ஒரு முக்கியமான முரண்பாடாகவே இருந்துகொண்டிருக்கிறது

சுவாமி