அன்புள்ள ஜெ
வெண்முரசின் இன்றைய பகுதியின் சிறப்பு
வரி பேரழகர்களின் வாழ்க்கை பிறரைப்போல் அமைவதில்லை என்பது. பேரழகு என்பது வெறும்
உடல்ரீதியான ஒரு பாஸிபிலிடி என்றுதான் நாம் பார்ப்போம். ஆனால் அது மனிதனால்
உருவாக்கிக் கொள்ளமுடியாதது என்பதனாலேயே மனிதனைக் கடந்த சிலவற்றின் வெளிப்பாடு
என்றும் நாம் அறியாத சில சக்திகளின் செலெக்ஷன் என்றும் எண்ணும்போது ஒருவகையான
துணுக்குறல்தான் ஏற்படுகின்றது.
அனைவராலும் பார்க்கப்படுவதனாலும்
எல்லாரும் கொண்டாடுவதனாலும் அழகானவர்களால் நார்மலாக வாழ்வது முடிவதில்லை. அவர்களின்
வாழ்க்கை மிகவும் வித்தியாசமானதாகவே உள்ளது. அதாவது பலசமயம் அவர்கள் விதியின்
கைப்பாவைகளாக உள்ளனர். அதை இந்த வரிகளில் வாசித்தபோது மனம் கனத்தது
எம்.ஆர்.ராமகிருஷ்ணன்
