Saturday, March 4, 2017

பெருந்துயர்


ஜெ

ஆயுஸும் அவன் தந்தை புரூரவசும் ஒரேவகையான துயர்களை அடைகிறார்கள். மனைவியைப்பிரிந்து புரூரவச் சாவுவரைக்கும் செல்கிறான். ஆயுஸ் மைந்தனைப்பிரிந்து சாவு வரைக்கும் செல்கிறான். இருவரும் அடைந்த இன்பம் ஓர் உச்சம். துக்கம் அடுத்த உச்சம்.. இரண்டுமே உக்கிரமானவை. புரூரவஸ் அதிலிருந்து மீள்கிறான். ஆயுஸால் முடியவில்லை ஏனென்றால் தான் தந்தைக்குச் செய்த பழிக்குப் பிராயச்சித்தமாக அவனே கேட்டு வாங்கியது இது

எதன் பொருட்டென்றாலும் பெருந்துயர் என்பது ஒன்றே. எவ்வடிவு கொண்டாலும் தெய்வம் ஒன்றே என்பது போல

என்றவரி அனைத்தையும் விளக்கிவிடுகிறது

எஸ்.சாந்தகுமார்