Saturday, March 18, 2017

அழகு






ஜெ

கிளாசிக்குகளின் முக்கியமான அம்சமே அழகுதான். அதில் நவீன இலக்கியங்களுக்கு ஒரு குறைபாடு உள்ளது. நவீன இலக்கியங்கள் நவீன விஷயங்களைக்கொண்டு அழகை உருவாக்கவேண்டும். நவீன இமேஜ்கள் மிகக்கம்மி. ஆனால் கிளாஸிஸத்தில் இமேஜ்களுக்குப் பஞ்சமே இல்லை. இந்திராணி இந்திரனுக்காகத் தவம்செய்கிறாள். அவள் காடு முடுக்க மலர்களாக அந்தத் தவம் பூத்திருக்கிறது. அந்த மலர்கள் நம்பிக்கை இழந்து வாடிவிடுகின்றன. 

அதில் ஒன்று இந்திரன் இருக்குமிடத்தை அறிந்தாலும் மீண்டும் மலரும். மரபான இமேஜ் தான் ஆனா மிகமிக அழகானது. நம் கற்பனையைத் தூண்டுவது. கிளாசிக்கலான விஷயங்களை ரசிக்க ஒருசின்ன மனநிலை வேண்டும். புதுமையை எதிர்பாக்கக்கூடாது. புதியவகையான மலர்ச்சியை மட்டும் எதிர்பார்க்கவேணும். அது இதில் நிகழ்ந்துள்ளது. 

இந்திரன் நினைத்தாலும்கூட அந்த மலர் மலர்வதை தடுக்கமுடியாது இல்லையா? காதல்கொண்ட ஒருவன் ஒருத்தியைப்பார்த்தாலே கண்கள் மலர்கின்றன அதைப்போல என லௌகீமகாக சமானம் சொல்லலாம். ஆனால் இந்த அழகு அதில் இல்லை. அழகுகளை உருவாக்கி ஒரே இடத்திலே சேர்ப்பதுதான் கிளாஸிஸம்

சுவாமி