Sunday, October 14, 2018

பீஷ்மர் ஏன் வில்தாழ்த்தினார்?



ஜெ


பீஷ்மர் ஏன் வில்தாழ்த்தினார்? மீண்டும் அந்த அத்தியாயத்தை வாசித்தேன். எந்த உணர்ச்சியும் சொல்லப்படவில்லை. வெறுமே நான்கு வரிகள்தான் உள்ளன.


பீஷ்மர் வில் அதிர அம்புவிட்டு படைவீரர்களை கொன்றுகொண்டே வந்தார். பால்ஹிகர் தன் கதையை நிலம்பதிய வைத்து யானை மேல் நிமிர்ந்து அமர்ந்து அவரை பார்த்தார். பீஷ்மர் பால்ஹிகரை சந்தித்த கணம் என்ன நிகழ்ந்ததென்று சுதசோமனால் உணரக்கூடவில்லை. அவரது வில் தழைந்தது. விழி திரும்ப தலை தாழ்த்தி ஒருகணம் நின்றபின் வில்லாலேயே பாகனை அறைந்து நேர் எதிர்த்திசைக்கு தன் தேரை திருப்பிக்கொண்டு செல்ல அவர் ஆணையிட்டார்.


நான்குவரிகளுக்கு முன்னால் உள்ளதெல்லாமே சுதசோமனின் உணர்ச்சிகள்தான். தன் தந்தை உடன்பிறந்தாரைக் கொல்வதைக்கண்டு அவன் தந்தை தண்டிக்கப்படவேண்டும் என நினைக்கும் இடம். அதன் தொடர்ச்சியாகவே இந்த இடம் வருகிறது. பீஷமரின் தந்தைதான் பால்ஹிகர் என்னும்போது இந்த இடத்தை புரிந்துகொள்ளமுடிகிறது

சந்திரசேகர்