Wednesday, October 10, 2018

தந்தையரும் மைந்தரும்



மீண்டுமொரு கொம்பொலி எழுந்தது. “தந்தையர் இருவர்!” என்றபடி வெறிகொண்டெழுந்து முன்னால் வந்தான் துருமசேனன். எவருடைய தந்தை? அச்சொல். தந்தை! அச்சொல் ஏன் எழுந்தது? தந்தையர்!  - இந்த வரிகளையே வாசித்துக்கொண்டிருந்தேன். மனம் கட்டில்லாமல் செல்லும் போர்ச்சித்தரிப்பு. வெறியுடன் போரிடுகிறார்கள் துருமசேனனும் சுதசோமனும். இருவரும் மைந்தர்கள். துச்சாதனனின் நெஞ்சைப்பிளப்பேன் என பீமன் சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறான். இப்போது இருவரும் சமானமாக போர் செய்கிறார்கள். அப்போது நிகழ்கிறது இந்த மன ஓட்டம். இதைப்புரிந்துகொள்ள விதி அவர்கள் இருவரையும் எதிரெதிரே நிறுத்தியதைத்தான் எண்ணிப்பார்க்கவேண்டும். அவர்கள் இருவருக்குள் பகைமை இல்லை. ஆனால் அவர்கள் இருவரும் தந்தையராக ஆகவேண்டியவர்கள். ஆகவே மாறிமாறிக் கொல்லத்துடிக்கிறார்கள். கொடுமையானது போர். ஆனால் வாழ்க்கை ஒரு போர்மாதிரித்தான்

சரவணக்குமார்