Saturday, October 20, 2018

அம்புமுனை



ஜெ

சாத்யகி அவனுடைய மைந்தர் இறந்த பின்னர் அந்த உணர்ச்சிவேகத்தில் களத்தில் நின்றிருக்கையில் அவனை அறியாமலேயே அவன் வில் இளைய யாதவரை நோக்கித் திரும்பியிருந்தது ஒரு அபாரமான சிறுகதையின் முடிவு போலிருந்தது. அந்த இடத்தை சாத்யகி கிருஷ்ணனைச் சந்திக்க வந்த காட்சியிலிருந்து வாசிக்கவேண்டும். அவன் அவருக்கு தொழும்பர் முத்திரை குத்திக்கொள்வதும் அடிமையாகவே ஆவதும் மைந்தர்களை அழைத்துவந்து கொடுப்பதும் எல்லாமே நினைவுக்கு வந்தன. அத்தனைதூரம் ஒரு திசையில் செல்லும் ஒருவன் ஒரு துளியேனும் மறுதிசைக்கும் திரும்பி வராமலிருக்கமாட்டான். ஏனென்றால் மனிதனின் உள்ளம் அப்படித்தான் செயல்படும் என நினைக்கிறேன்


ராஜ்