Wednesday, October 10, 2018

மானுட உள்ளம்




அன்புள்ள ஜெ

வெண்முரசில் திரும்பத்திரும்ப நிகழும் போருக்குள் ஓர் ஆலாபனையின் அம்சம் கலந்துள்ளது. ஒரே மாதிரி போர். ஆனால் ஒவ்வொருமுறையும் அது ஒவ்வொன்றாக நிகழ்கிறது. அதைப்பற்றி எண்ணிப்பார்த்தால் மட்டுமே அது தெரிகிறது. உதாரணமாக அத்தனை இளைஞர்களை அறைந்தே கொன்றவன் பீமன். ஆனால் அவனே தன் மகன்களை அழைத்து ஒருமுறை பார்த்துக்கொள்கிறான். அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிடக்கூடாதே என்று மனம் வருந்தவும் செய்கிறான். மனித உள்ளத்தின் ஆச்சரியங்கள் இவை. ஈவிரக்கமில்லாத கொலைகாரர்களின் மனமும் தங்களைச்சார்ந்தவர்களை எண்ணி வருந்தத்தான் செய்கிறது

அர்விந்த்