Wednesday, October 31, 2018

சகோதரக் கொலைகள்




இனிய ஜெயம் 

இன்று அனிலை முன் பீஷ்மரின் வில் தாழும் போது மொத்த திசை தேர் வெள்ளத்தின் உணர்வு நிலையும் ஒரு வரிசையில் வந்து நின்று விட்டதுபுனைவில் பல பலிகள் ,பலவித உணர்வு நிலைகள் சுழித்தாலும், புனைவின் உணர்வு தளம் கொஞ்சம் கூடுதலாக குவிவது சகோதர பலிகள் மீதேஅன்று நகுல சகாதேவனை காக்க அர்ஜுனன் சல்யர் வசம் பேசும் கணத்தில் துவங்குகிறது அது .   

நேற்று துரியன் கூறிய பார்வையால் துளைக்கும் வண்ணம் சகுனியை பார்த்துக்கொண்டே கடந்து செல்கிறான் . அந்த பார்வைக்கு ஒரே பொருள்தான் .நூறு தம்பியர் புடை சூழ பிறந்தவனாக நீ இருந்திருந்தால் ,இன்று இங்கே வந்து நிற்கும் விழைவை,உன்னில் கண்ட அந்த விழைவை,என்னில் ஏற்றி இருப்பாயாபெருங்கருணை கொண்ட பெரு வேழம் அவன் .ஆகவேதான் ,சகுனி தனக்கு அளித்ததை அவன் ருக்மிக்கு அளிக்காமல் ருக்மியை திருப்பி அனுப்புகிறான் .

பாவம் பீஷ்மருக்கு அந்த வாய்ப்பே இல்லை . பீஷ்மர் வில் மீண்டும் மீண்டும் தழைகிறது யார் முன்னால்சாத்யகி பீஷ்மர் முன் நிற்கையில் வெளிப்படையாகவே அது சித்தரிக்கப்படுகிறது .பீஷ்மர் வில் தாழ்த்துவது தனது சகோதர பலியை தனது கையால் நிகழ்த்த இயலாது என்பதால்தான் . பால்கிகர் ,பீமன் முன் வில் தாழும் காரணம் அவர்கள் தனது ஆடிப்பிம்பம் என்பதால்தான் . அவரால் சகோதர படுகொலை நிகழ்த்த இயலாது ,தானே போன்றஒருவனையும் கொல்ல,இயலாது ,முற்றிலும் பீஷ்மனே என முன்னால் நிற்கும் ஒருவரையும் அவரால் கொல்ல முடியாது .

பீமனுக்கும் பீஷ்மருக்கும் என்ன ஒரு ஒற்றுமை .இருவருமே தன் பொருட்டு என ஒன்றை செய்யாதவர்கள் , இருவருமே அன்னையர் கொண்ட நஞ்சின் செயல் வடிவம் , இருவரும் இன்று களத்தில் நின்று கொன்று குவிப்பது ஒரே ஒரு பெண் மீது கொண்ட காதலால் . திரௌபதி மீதான வென்ற  காதல் பீமனை இங்கே வந்து நிறுத்தி இருக்கிறது .அம்பை மீதான வெல்லாத காதல் பீஷ்மரை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது .

இதோ இன்று குருதியாடும் சிம்மமென நிற்கும் பீஷ்மர் முன் , குருதி சுவைத்து நிற்கும் அணிலை அம்பை மட்டும் தானாஅங்கே நிற்கும் பீஷ்மரின் தலைகீழ் வடிவம் கூடத்தானேபுறத்தில் யார் பீஷ்மரோ ,அவருக்கு இணையாக அகத்தில் வாழும் பீஷ்மர் எழுந்து நிற்கிறார்

தனக்குள் வாழும் பெண் வடிவான திரௌபதியை வெல்ல இயலாமல் வீழ்ந்த வகையில் தானே துரியன் இங்கு வந்து நிற்கிறான்பீஷ்மர் கை தளாராமல் வேறு என்னதான் நடக்கும்

கடலூர் சீனு