Wednesday, October 24, 2018

யானை



இனிய ஜெயம் 

லிங்கராஜ் அவர்களின் கடிதம் வாசித்தேன் . திருதா எல்லாம் எங்கதான் போனார் .நியாயமான கேள்வி ..ஏன் இவ்ளோ அவசரம் ?  பிதாமகர் மண்டை உடைந்து இறக்கும் அன்று இரவு தான் திருதா நாவலுக்குள் வருவார் .

என் நோக்கில் போர் சூழலில் நீங்கள் ''இப்போதே ''சித்தரித்தாக வேண்டிய ஒன்று என எனது பார்வையில் படுவது ....

அந்த போரில் இறந்த யானைகள், குதிரைகள்  அடுத்த நாள் போருக்குள் எவ்வாறு அப்புறப்படுத்தப் படுகிறது என்பதே .

திருவானைக்கா  யானை இறந்த போது பார்த்திருக்கிறேன் .இன்றைய தொழில் வசதி கொண்டே , அந்த யானையை அங்கிருந்து அகற்றி வாகனத்தில் ஏற்ற ஒரு மணிநேரம் பிடித்தது ..போர் சூழல் என்றால் எத்தனை யானைகள் ....எத்தனை பலிகள் ...

கடலூர் சீனு