Tuesday, October 9, 2018

வெண்முரசின் கட்டமைப்பு- கடிதம்


வெண்முரசின் கட்டமைப்பு


அன்புள்ள ஜெ

வெண்முரசின் கட்டமைப்பு பற்றிய நாகராஜனின் கட்டுரை மிகச்சிறப்பான ஒன்று . வெண்முரசை எப்படி வாசிக்கவேண்டும் என்று எனக்குக் காட்டியது அது. நானே உதிரி உதிரியாக சிந்தித்திருந்தவற்றைத் தெளிவாகவே எனக்கு வாசிக்கக்கிடைத்தது. அற்புதமான கட்டுரை

அதில் இந்த நாவல் பற்றிய குறிப்பும் முக்கியமானது. பீஷ்மரிடம் இருக்கும் எட்டு வசுக்களும் அவருடைய கங்கைகுலத்து பழங்குடிவாழ்க்கையிலிருந்து வந்தவை. அவருடைய அம்மா அளித்தவை. அவை செத்துப்போனவர்களுடையவை. ஆகவே அவர்கள் முன்னோர்கள். ஒவ்வொன்றாக அவர் இழக்கையில்தான் அவருடைய தோல்வி அமைகிறது. அருமையான கருத்து

என்.ஆர். மகாலிங்கம்