Thursday, October 18, 2018

தெய்வங்களைப் பழிவாங்குதல்




ஜெ

நான் முதல் வாசிப்பில் இந்த வரியை தொடர்பு படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் எப்போதுமே இரவில் இன்னொருமுறை வாசித்துவிடுவேன். அப்போது ஆச்சரியமாக ஒரு திறப்பு. இது முன்னால் வரவிருப்பதை சுட்டுகிறது

எளிய மானுடர்…” என்றான். “மிக மிக எளியவர்கள். இத்தனை எளிய உயிர்களை ஏன் படைத்தன தெய்வங்கள்? ஏன் இரக்கமில்லாது இவற்றுடன் ஆடுகின்றன?” அஸ்வத்தாமன் நகைத்துஅதற்கு மாற்றாக எளிய மானுடர் தங்கள் ஆணவத்தையும் சிறுமையையும் கொண்டு தெய்வங்களை பழிதீர்க்கிறார்கள்என்றான். கிருதவர்மன் 

மனிதர்களை எளிய அற்ப உயிர்களாக ஆக்கி விளையாடும் தெய்வங்களில் ஒருவன்தான் கண்ணன். கண்ணனுக்கு பழிக்குப்பழியாக தங்கள் ஆணவத்தையும் சிறுமையையும்தான் மக்கள் அளிக்கிறார்கள். அவர்கள் அடித்துக்கொண்டு செத்தபோது மிக அதிகமான துக்கத்தை கண்ணன்தானே அனுபவித்திருப்பார்?

பாஸ்கர்