Thursday, October 18, 2018

சாவு




https://www.jeyamohan.in/113947#.W8FsMHszbIU

ஜெ

தம்பியர் இறந்தபின் துயரத்தால் மெலிந்து சோர்ந்து படை ஆலோசனைக்கு வரும் துரியனின் காட்சி மனதை பாரமாக்கியது. ஆரம்பம் முதலே அவனை ஒரு இரும்பு மனிதனாக காட்டவில்லை வெண்முரசு. சில இடங்களில் இரும்பு மனிதனாக இருப்பவன் சில இடங்களில் நெகிழ்வானவனாகவும் இருக்கிறான். அவனுக்கு மிக ஆழமான பற்று இருப்பது தன் தம்பிகளிடம்தான். ஏனென்றால் அவர்கள் ஒரே திரளாகவே இருக்கிறார்கள். இந்நாவலில் இப்போது நான் நினைவுகூர்வது என்னவென்றால் ஏறத்தாழ எல்லா காட்சிகளிலுமே துரியோதனன் தம்பிகள் புடைசூழத்தான் இருந்துகொண்டிருக்கிறான் என்பதுதான். தம்பிகள் சூழ இருந்தவனுக்கு அந்த தம்பிகளின் சாவை ஒரு சாதாரண போர் இழப்பாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் அவனுக்கு அவனே சாவதைப்போலத்தான். நூறுமுறை சாவு என அதை துச்சாதனன் சொல்கிறான். நூறாம் முறைதான் துரியோதனன் இறக்கிறான்

அர்விந்த்