Wednesday, November 9, 2016

கண்டனம் 2



ஜெமோ

வெண்முரசு நாவல்களை வாசித்துக்கொண்டே செல்கிறேன். இந்நாவலில் உள்ள நோக்கம் என்ன என்று எனக்குப்புரியவில்லை. நிறைய இடங்களில் மகாபாரதத்தில் இருந்து அப்பட்டமாக மீறிச்செல்கிறீர்கள். மகாபாரதமே உங்களுக்குப்புரியவில்லை என்று நினைக்கிறேன்.

\தர்ம ஸம்ஸ்தாபனார்த்தம் அவதாரம் செய்த கிருஷ்ணன் தான் அதிலே நாயகன். அவனுடைய கதைதான் அது. அது மகாபாரதத்திலேயே பலமுறை சொல்லியிருக்கிறது

உங்கள் நாவலிலே கிருஷ்ணன் மாறிக்கொண்டே இருக்கிறான். நீலம் நாவலில் ஒருமாதிரி இருக்கிறான். பிரயாகையில் வேறே ஒருவன். இந்திரநீலத்திலே ஒருவன். இப்போது சுத்தமாகச் சம்பந்தமே இல்லாமல் இன்னொருவன்
\
இந்தவகை எழுத்திலே யூனிட்டியே இல்லை. மனம்போனபோக்கிலே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இது உணர்ந்து எழுதும் எழுத்து கிடையாது. கண்டிக்கத்தக்க எழுத்து. இதை இந்துக்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது


சிவராமன்