Wednesday, November 9, 2016

யமன் உலகம்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் இந்த அத்தியாயத்தின் நரக வர்ணனை உக்கிரமானதாக உள்ளது. உடல்கள் மேல் அமைந்த நகரம். உடல்களால் ஆன நகரம். மனிதனுக்கு மிகவும் கடினமானது இன்னொரு உடலை மிதிப்பதும் அதன்மேல் அமர்வதும் தான் அந்த உடல்களாலேயே உர்நுவான நகரம் என்பதே கூசவைப்பதாக உள்ளது


வர்ணனைகள் மிகமிக வலுவானவை. படிக்கவும் முடியவில்லை. படித்தபின் நினைவிலேயே நின்று கொந்தளிப்பை அளிக்கின்றன. கிராதம் இருட்டின் அழகியல்கொண்ட நூல்

ஜெயராமன்