Thursday, November 3, 2016

ட்பின் கெடுமணம்



ஜெ

வெண்முரசை வாசிக்கும்போது வரும் மிகப்பெரிய மன எழுச்சி என்பது நாம் வாழும் இன்றைய வாழ்க்கையை அதில் பார்ப்பதுதான். உண்மையில் அதை என்னால் விளக்க முடியாது. உதாரணமாக இன்றைக்கு ஒருவரி  நட்பின் கெடுமணம் இது, மூத்தவரே. நம் வாழ்க்கையில் இந்தக் கெடுமணத்தை அனுபவித்திருப்போம். இது எங்கே நிகழ்கிறத, எப்படி திரிபடைகிறது என்று நம்மால்  கண்டுபிடிக்கவே முடியது. அது நிகழ்ந்தபிறகுதான் நமக்கே தெரியும். திரிந்துவிட்டது என்று

என் வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் விட கொடுமையானது அப்படி எனக்கு மனம் திரிந்துபோய் ஒரு பெரிய தப்பை நான் செய்ததுதான். அதை என்னால் திருப்பி சரியாக்கவே முடியவில்லை. இன்றைக்கு இந்த வரியைப்பார்த்ததும் அப்படியே அமர்ந்து விட்டேன்





எஸ். மாரியப்பன்