Thursday, November 3, 2016

ஏழிருள்:



எது எது என்று தேடிச்செல்பவன் இல்லை இல்லை என்று மறுத்துமறுத்துச் செல்கிறான். அவன் அறியும் பேரிருள் இப்புடவியை ஏழுமுறை மூடியிருக்கிறது. விழியறியும் இருள் சிறுதிரை. உணர்வறியும் இருள் பெருந்திரை. எண்ணம் அறியும் இருள் இயலாத்திரை. இருளுக்கு இருளாவது யோகம் அறியும் இருள்” – பிச்சாண்டவர் வைசம்பாயனனிடம் – கிராதம் 5.

மானுட வாழ்க்கை என்பது இப்புவியை ஆளும் பெருவல்லமைகளினால் ஆட்கொள்ளப்படுவதே. வெற்றியால் புகழால் செல்வத்தால் காதலால் வஞ்சத்தால் அச்சத்தால் சிறுமையால் ஆட்கொள்ளப்பட்டுத்தான் இங்கு அத்தனை மானுடரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.” – சகதேவன் அர்ச்சுனனிடம் (கிராதம் 11).

வஞ்சமும், அச்சமும், சிறுமையும் மட்டுமல்ல, காதலும் செல்வமும் புகழும் வெற்றியும் கூடத்தான் இருள் கொண்டிருக்கின்றன. அனைத்து இருளையும், அனைத்தின் இருளையும் அறிந்து, அவற்றைப் பிளந்து எழுபவனே யோகம் அறிந்த இருளைப் போர்த்திய சிவயோகி.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.