Sunday, November 6, 2016

அச்சமும் ஆணவமும்





திரு. ஜெ,

ஒரு  சின்ன சந்தேகம். இன்றைய கிராதம் 15 ல் வரும் பின்வரும் வரிகளில் வரிசை மாறியது போல் உள்ளது.

இங்கு வருக! இங்கிருந்து மூன்றடி தொலைவு அந்த பொன்னிறவரிக்கு. முதலடியில் உன் படைக்கலங்களை கைவிடுக! இரண்டாவது அடியில் அப்படைக்கலங்களை தக்கவைத்திருக்கும் அச்சத்தை கைவிடுக! மூன்றாவது காலடியில் அவ்வச்சமென தன்னை காட்டிக் கொண்டிருக்கும் ஆணவத்தை கைவிடுக! அங்கு கீழே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதென்று உனக்குக் காட்டுகிறேன்என்று அவன் தோளில் அவர் கையை வைத்தார். திரும்புக, நோக்குக!

  “படை களம், அதை வைத்திருக்கும் ஆணவம், அதற்கு அடிப்படையான அச்சம்”  இது சரியான    
   வரிசைபோல் உள்ளது
   
   அச்சம் ஆணவமாக வெளிப்படுமா, அல்லது ஆணவம் அச்சமாக வெளிப்படுமா?

 தவறு இருந்தால் மன்னிக்கவும் !

M K Moorthi


அன்புள்ள மூர்த்தி அவர்களுக்கு

ஒவ்வொரு பள்ளிக்கும் அதைச்சார்ந்த  பார்வை உள்ளது. சைவ மரபுகளான காளாமுகம் போன்றவை அச்சத்தை ஆதி உணர்வாக நினைக்கின்றன. ஆனால் சமணம் அகங்காரத்தையே ஆதி உணர்வாக நினைக்கிறது

ஜெ