ஜெ
வெண்முரசின் இதுவரையிலான போக்கிலேயே ஒலிக்காத ஒரு
தனிக்குரல் கடோத்கஜனிடமிருந்து எழுகிறது. தந்தையே, எவருடைய சொல்லும் மானுடரின் அழிவுக்கு
நிகரானதல்ல. சொல்லுக்காக மானுடர் சாவதைப்போல் வீண்செயல் வேறில்லை இதுவரை வந்ததெல்லாம்
இளைய யாதவருக்கு எதிர்ப்போ ஆதரவோதான். முதல்முறையாக அதனால் பயன் என்ன என்ற கேள்வி எழுகிறது.
மனுஷன் செத்தாய்யா கொள்கையை நிலைநாட்டுகிறது என்ற கேள்வியை கடோத்கஜனைப்போல ஒரு காட்டுவாசிதான்
கேட்கமுடியும்.
அவர் தோற்பார் என
உறுதியாகச் சொல்கிறான் கடோத்கஜன். ஆனால்
முழுமையாகவே தோற்பார்.” இளைய யாதவர் அதே புன்னகையுடன் நோக்கிநிற்க “பெரியவர்கள் தோற்றாக
வேண்டும். மிகப் பெரியவர்கள் முற்றாக தோற்கவேண்டும். அதுவே இவ்வுலகின் நெறி” என்றான்
கடோத்கஜன். என்ற அவனுடைய வரி ஒரு தீர்க்கதரிசனம் போலவோ சாபம்போலவோ ஒலிக்கிறது.
மொத்த வெண்முரசையே வேறொரு கோணத்தில் திருப்பிவிட்டிருக்கிறான் அவன்
சாரங்கன்