Wednesday, October 3, 2018

சொல்வளர்காடு உரை



எழுத்தாளர் அவர்களுக்கு

இன்றைய சொல்வளர்காடு பற்றிய ராஜகோபாலன் அவர்களின் உரை மிக அருமையாக இருந்தது.

ஒரு தரிசனம் தன் அளவிலேயே நிகழ்ந்து தனியாக நிற்க கூடியது, 
அது சொல் ஆவதற்க்கு முன்னால் குறியீடுகளாக சுலபமாக ஆகின்றது அவை பின் தத்துவமாக சொல்படுத்தி நிருவபடுகின்றன 
இன்னொரு எல்லையில் படைப்புகளில் சொல் மூலம் கதைகளில், நிகழ்வுகள் மூலம், தரிசனங்கள் வெளிபடுகின்றன. 
தத்வம் இந்த படைப்புகளில் ஊடுபாவாக வருகின்றன - என்று தொடங்கி சொல்வளர்காடு நாவலை இன்னும் விரிவாக விளக்க தொடங்கினார்.

இந்த உரையை அவர் முழுமையாக எழுத்து வடிவில் வெளியிட வேண்டும் என்று எண்ணுகின்றேன்.


உரையில் இருந்து என்னால் மறக்க முடியாதவை உபநிஷதங்களில் இருந்து  நேரடியாக கோடு இட்டு சொல்வளர்காடு நாவலில் வரும் நிகழ்வுகளும், வரிகளும்.

உதாரனம் உத்தாலகரும், ஸ்வேதகேதுவும் பாஞ்சால மன்னனின் கேள்விக்கு விடை தெரியாமல் போவதும் பின் இருவருக்கும் அவனே அழைத்து மன்னனே விடைகளை சொல்வதும்.

இது உபநிஷதத்தில் 4 கேள்விகளும் அதன் பின் மண்ணனிடம் இருந்து சிறு எள்ளலும் பின் விடைகளுமாக வருகின்றது. (அந்த வரிகளை படித்தே காண்பித்தார், பையில் ஒரு 10 புத்தகங்கள் வைத்து இருந்தார் இன்று)

அதுவே சொல்வளர்காட்டில் ஒரு நெடும் கதை. சொல்வளர்காடு படித்தவர்கள் அறிந்ததே.. அதை சுருக்கமாக சொல்லி... பின் பாஞ்சாலன் 5 கேள்விகள் கேட்பதை சொன்னார் (வென்முரசில்)

அதாவது உபநிஷதத்தில் கேட்க்க படுவது 4 கேள்விகள் ஆணால் அவற்றுக்கு பதிலின் ஊடாக ஐன்தாவது கேள்வியும் உரைத்து பதிலும் தருகிறான் மன்னன் உபநிஷதத்தில். 

அதை வென்முரசில் எப்படி எடுத்து ஆளபட்டு உள்ளது என்பதையும்.. 
அந்த பதில்களை பாஞ்சாலன், உத்தாலகருடைய மகனாகிய ஸ்வேதகேதுவுக்கு, உரைக்கும் தருனம்  -- அவன் தகுந்தவனா என்கிற விசாரனை நிகழ்வதும் பின் அவனை 'அருகே அமர்க' என்று குறிப்பிட்டு ஸ்வேதகேதுவின் தலையை இழுத்து காதை வாயருகே கொன்டு வந்து பதிலை அளிக்கின்றான் பாஞ்சாலன். பின் அவனிடம் அந்த தரிசனதின் சுவடி கட்டும் கொடுக்கபடுகிறது.. இது மொத்தமும் உபநிஷத வரிகளில் மறைவாக உள்ளது.

கதையாக இந்த விஷங்கள் பறந்து சென்றன. இப்படி விளக்க படும் போது எவ்வளவு ஆழம் சொல்வளர்காடு சென்றுள்ளது என்று புறிந்து கொள்ள முடிகிறது.

இது போலவே ஐதரேய காடும் அதில் தந்தை மகனான விசாலரும் மகிபாலனும் வரும் இடங்களும். அங்கே ப்ரக்ஞையை பற்றிய தரிசனம் விவரிக்க படும் பகுதிகளும் விரிவாக உபநிஷதத்தையும் சொல்வளர்காடு நாவல் வரிகளையும் படித்து காண்பிக்க பட்டது.

பிரம்மனில் இருந்து ப்ரக்ஞையை தனி மனிதனுக்கான ப்ரக்ஞையாக உருமாரும் இடம் ஐத்ரேய உபநிஷத புத்தகத்தில் பல பக்கங்கள் தள்ளி உள்ளன.. 
சொல்வளர்காடு ஒன்றின் அடுத்து ஒன்றை அடுக்குகின்றது. அப்படி வாசிக்கும் போது அதன் பொருளும், பிரம்மத்தின் துளி மனிதன் எனும் விஷயமும், எளிதில் கடத்தபட்டதும் விளங்குகிறது. அதன் ப்ரம்மான்டமும் முகத்தின் முன் வந்து நிற்கிறது.

இன்னும் இன்னும் விரிந்து கொன்டே சென்றது உரை. இதன் நடுவே பான்டவர்களும், முக்கியமாக யுதிஷ்டிரனும் ஏன் வருகிறார்கள். இந்த காடுகள் மூலம் யுதிஷ்டிரனுக்குள் என்ன நிகழ்கிறது என்றும் சுட்ட பட்டது.
சொல்வளர்காடு பற்றி இது மூன்றாவது உறை. இன்னும் இன்னும் இது விரிவடைந்து கொன்டே போகும் என்ற எண்ணமே தோண்றுகிறது.

ராஜகோலன் இன்று அதிசயமாக nervous-ஆக இருந்தாரோ என்று எனக்கு ஒரு எண்ணம். எப்படி இருந்தாலும் மருபடியும் சொல்வளர்காடு நோக்கி மனம் திருப்பியது. இன்னும் நிறைய படிக்க வேண்டும் வென்முரசை முழுமையாக அனுபவிக்க.

நன்றி
ராகவ்

PS:
எனக்கு சுத்தமாக எழுத வரவில்லை, ஆணால் உறுதியாக என்னால் படைப்பை, உரைகளை புரிந்து கொள்ள முடிகிறது.. அதில் தீவிரமாகவே உள்ளேன். நேர் பேச்சில் தெளிவாக வருகிறது. எழுத்து தான்...
இன்று புரிந்து கொன்டதை பதிய வேண்டும் என்று தோண்றியது. கொஞ்சமேணூம் நியாயம் செய்து இருக்கின்றேன் என்று எண்ணுகிறேன்.