Monday, October 1, 2018

எல்லைகடத்தல்




ஜெ

இந்த நாவலை எல்லைகடத்தல் என்று தலைப்பு வைத்தே வாசிக்கலாமென்று தோன்றுகிறது. நாவலின் தீம் பீஷ்மர் தன் எல்லைகலைக் கடப்பதுதான். ஆனால் ஒவ்வொருவரும் எல்லை கடக்கிறார்கள். எல்லையைக் கடப்பாயா என்றுதான் அம்பாதேவி வந்து அர்ஜுனனிடமும் பீமனிடமும் கேட்கிறாள். பீமன் எல்லையைக் கடக்கிறான். பீஷ்மர் ஒவ்வொரு எல்லையையாகக் கடக்கிறார். எல்லையிலேயே முட்டித்ததும்பிக்கொண்டிருக்கிறான் அர்ஜுனன்.


போர் என்பதே ஒருவன் தன்னுடைய எல்லையைக் காண்பதுதான். உடல்வலிமையின் எல்லை. உள்ளத்தின் எல்லை. பயமும் துன்பமும்கூட எல்லைகள்தான். ஆனால் ஜயத்ரதன் சொல்வதுபோல உச்சகட்ட எல்லை என்பது தன்னாலேயே சமாதானப்படுத்திக்கொள்ள முடியாத மாபெரும் செயல் ஒன்றைச் செய்வதுதான். மீண்டும் அதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. அதை வெல்ல ஒரே வழி அதையே மீண்டும் மீண்டும் செய்வதுதான். அர்ஜுனன் அதைச்செய்ய ஆரம்பிக்கும்போதுதான் போரின் திசை மாறும் என நினைக்கிறேன்

சரவணன்