Thursday, January 24, 2019

அச்சம்



ஜெ

வண்ணக்கடலில் இருந்து ஒருவரி

அச்சமென்றால் இறப்புக்கு, இழப்புக்கு, அவ மதிப்புக்கு அஞ்ச வேண்டும். ஆனால் இதுவும் அச்சம்தான். ஏனென்றறியாத அச்சம். இருத்தலின் அடியிலா ஆழத்தை காண்கையில், இன்மையின் முடிவிலியை எதிர்கொள்கையில், சிந்தனை கால பெருவெண்மையை முட்டுகையில் தனிமையில் உருவாகும் அச்சம்

சிலசமயம் இப்படி சில வரிகள் ஒருவகையான ஆத்மவெளிப்பாடுகள் போல ஆகிவிடுகின்றன. அச்சம் என்பதற்கும் ஆங்ஸ்ட் என்பதற்குமான வேறுபாடு என்று இதைச் சொல்லத்தோன்றுகிறது. உண்மையில் லௌகீகமாக அஞ்சுவதற்கு ஒன்றுமே இல்லாமலிருக்கும்போதுதான் இந்த அச்சம் உருவாகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. வண்டுபோல துரத்தித் துரத்தி வந்துகொண்டே இருக்கும் வரி இது

ராஜ்