Thursday, January 10, 2019

செவ்வியல்




அன்புள்ள ஜெயமோகன் சார்,

நீங்கள் குறைந்த பட்சம் இருபத்தி ஐந்து வருடங்களாக காவியம் என்றால் என்ன ? செவ்வியல் என்றால் என்ன என விளக்கியிருக்கிறீர்கள். நானும் ஒரு ஐந்து வருடங்களாக உங்களின் அதுகுறித்த கட்டுரைகளை படித்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் இன்றுதான் எனக்கு மூளையில் பல்ப் எரிந்தது.

கர்ணனுக்கு நாகாஸ்திரம்,அர்ஜுனனுக்கு அக்னியாஸ்திரம் என்று நானே ஒரு நேர்கோட்டில் கதையை புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஆனால் நாக உலகத்தில் ஆரியகன் பீமசேனனுக்கு ஆதரவாகவும் மற்றவர்கள் கர்ணனுக்கு ஆதரவாகவும் கொந்தளிக்கும்போது எனக்கே பெருங்குழப்பமாக இருந்தது. அதாவது அனைவரும் கர்ணனுக்கு ஆதரவாக அல்லவா இருக்க வேண்டும் என்று. அப்படி இருந்தால் அது என்ன கதை என்று மனம் கேட்க திடுக்கென்று இதுதான் காவியம் என்று புரிந்துகொண்டேன். இங்கு எதுவும் ஒற்றைபடையில் இல்லை. அனைத்தும் ஒன்றினுள் ஓன்று இறுக்கி கட்டபட்டிருக்கிறது. மூன்றுகாலங்களும் கலந்த ஒரு உலகு. இதை எப்டி எழுதுகிறீர்கள், உங்களின் மைண்ட்செட்தான் என்ன, உங்களை நினைக்கும்போது ஒரு நிமிடம் கர்ணன்,அர்ஜுனன்லாம் எனது மனதில் காணமல் போய்விட்டார்கள். குருஷேத்திரமே ஸ்டில் பொசிஷனில் தான் மனதுக்குள் இருக்கிறது.

டி.வி.மகாபாரதம் பார்த்து பார்த்து  நாகாஸ்திரம் பாம்பு மாதிரி பறக்கும், அக்னியாஸ்திரம் அக்னியை கக்கும் என்று எல்லாம் உங்களிடம் எதிர்பார்த்தது ரொம்ப ஓவர் என்று நினைத்து சிரித்துக்கொண்டேன். அவைகள் ஆயுதங்கள் அல்ல வேதங்கள் என்பதையும் இன்றுதான் புரிந்துகொண்டேன்.   



regards,
stephen raj kulasekaran.p