Wednesday, January 16, 2019

இறப்பின் தருணத்தில்



இறப்பின் தருணத்தில் இருப்பவர் இவ்வுலகுக்கே ஆணையிடும் தகுதி கொள்கிறார். ஏனெனில் இங்கிருந்து அவர் பெற்றுக்கொள்ள எதுவுமில்லை. சொற்களன்றி இவ்வுலகுக்கு அளிப்பதற்கும் ஏதுமில்லை - 

என்ற வரி வெண்முரசில் பீஷ்மரைப்பற்றி மட்டும் அல்ல ஒட்டுமொத்தமாகவே அத்தனை கதாபாத்திரங்களைப்பற்றியும் சொல்வதுபோல் இருக்கிறது. ஏனென்றால் போர் முடிந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஓரிருநாட்களில் சாகக்கூடும் என எல்லாருக்குமே தெரியும். எல்லாருமே ஏராளமாக இழந்திருக்கிறார்கள். ஆகவே எல்லாருமே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் இருக்கிறார்கள். பொய்நடிப்பாக எதுவும் இல்லை. எல்லாரும் உண்மைகளை நேருக்குநேர் சந்திக்கிறார்கள். மன்னிப்பு கோருகிறார்கள். கசப்பானவற்றையும் சிந்திக்கிறார்கள். போர்முனையாக இருந்ததனால்தான் துரோணர் தன் மனமறிந்த உண்மையைச் சொல்கிறார் என தோன்றுகிறது

ஜெயராமன்