Wednesday, January 23, 2019

குந்தி கைவிட்டாளா?





முரண். மழை பாடல் என்று நினைக்கிறேன். குந்தி எதிரிகளிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்து நீந்துவாள். கையில் கர்ணன் இருக்கும் கூடை. ஆனால் ஆற்று தண்ணீரின் விசையில் கூடை ஆற்றோடு சென்று விடும். குந்தியும் தன் படைகளை வைத்து தேடி பார்த்து குழந்தை தொலைந்து விட்டது என்ற நிலையை அடைவாள். என்னை மிகவும் யோசிக்க வைத்த தருணங்களில் ஒன்று அது. நவீன காவியம் என்பது ஒரு மாற்று வரலாறை சொல்வது என்று உணர்த்திய காட்சி அது. குந்தி என்ற பேரரசி ஒரு சாதாரண பெண் போன்று குழந்தையை முழு சித்ததோடு ஆற்றில் அனுப்பி வைப்பது ஏற்க கூடியதாக இல்லை. வெண்முரசின் இந்த குந்திக்கு நிகழ்ந்த ஓரு விபத்து சரியன பட்டது.

ஆனால் அத்தியாயம் 27ல் வரும் காட்சி அதற்கு முற்றிலும் முரணாக உள்ளது

//கன்னிச்சோலையில் நான் வாழ்ந்த நாளில் உன்னை பெற்றேன். பழிக்கு அஞ்சி உன்னை கைவிட்டேன்.” அவன் விழிதூக்கி அவளை நோக்க “ஆம், என் குடியில் அது பழி சேர்ப்பதல்ல. ஆனால் நான் ஷத்ரியக்குடி ஒன்றுக்கு மணம்முடித்துச் செல்ல விழைவுகொண்டிருந்தேன். பாரதவர்ஷத்தை ஆள திட்டமிட்டிருந்தேன்” என்று குந்தி சொன்னாள். “என் விழைவால் உன்னைத் துறந்தேன். அதை என்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒளித்ததில்லை. ஆகவே உன்னிடமும் மறைக்கவேண்டியதில்லை. நான் பிறப்பால் யாதவப்பெண் எனினும் அகத்தால் ஷத்ரியக்குடியினள். விழைவே ஷத்ரியர்களை உருவாக்கும் விசை.”
//

சதீஷ்குமார் கணேசன்