Sunday, January 13, 2019

போர்முனையில்...



அன்பின் ஜெ,

இன்றைய (கார்கடல்-19) அத்தியாயம் உணர்வெழுச்சியும்,உவமைகளும்,தத்துவங்களும்,அங்கதமும் நிறைந்தது.

அங்கரை வாழ்த்தி பாண்டவ படைகள் ஆர்ப்பரிப்பதை எதிர்த்து  சகாதேவனிடம் தன் உள்ளத்து கசடுகளை கொட்டுகிறார் பேரறத்தானென போற்றப்படும் யுதிஷ்டிரன்.

விஜயத்தோடு  வலக்கையை இடையில்
வைத்து போர்முகம் நிற்க்கும் அங்கன்
காண்டீபத்தோடு இடக்கையை இடையில் வைத்து எதிர் நிற்க்கும் அர்ஜூனன்,

ஆடிப்பாவை போல் அர்ஜூனன் உணர்வதை மிக அழகாய் எடுத்துக்காட்டும் இடங்கள்.

பேரறத்தான் போரறத்தை விட சூதர்சொல்லே பெரிதென எண்ணுவதும் அதற்கான தீர்வை மிகச்செம்மையான போர்சூழ்கையொன்றை வகுத்துமுடித்த திருப்தியோடு அணுகுவதும் வேடிக்கை.

“சூதர்கள் இனி புதியதாகப் பாடுவதற்கு ஒன்றுமில்லை, மூத்தவரே. இந்தப் பத்து நாட்களும் பெரும்பாலும் நீங்கள் ஒளிந்துகொண்டுதான் இருந்தீர்கள்” 

ஒவ்வொரு பொருந்தா அவை நிகழ்வுகளையும் எள்ளி நகையாடும் பீமன்.

போர் துவக்கத்திற்க்கு தயாராய் ஓங்கி நிற்க்கும் கழைக்கோல்கள்.

"பெருமழை ஒரேகணத்தில் இறங்கும் ஒலிபோல பாண்டவப் படையும் வாழ்த்தொலிக்கத் தொடங்கியது."

பலமுறை கேட்டதனால் இவ்வரிகள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்தபடி உள்ளன.  

-யோகேஸ்வரன் ராமநாதன்.