Tuesday, January 22, 2019

நாகமனம்



அன்புள்ள ஜெ

நலம்தானே? வெண்முரசில் இந்த வரியைவாசித்தேன்.

ளிந்திருக்கும் வஞ்சம், மறைத்துக்கொண்ட சினம், அடக்கிக்கொண்ட விழைவு, ஒலியாகாத சொல், திரளாத எண்ணம், திரிபடைந்த தவம் அனைத்தும் நஞ்சே.

இந்நாவல்கள் முழுக்க பாம்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. வரலாற்று ரீதியாக இந்தியாவிலிருந்த நாகர்கள் அசுரர்கள் ஆகியவர்களுக்கு ஒரு ஹிஸ்டாரிசிட்டியை கற்பனைசெய்கிறீர்கள் என்றுபுரிகிறது. ஆனால் நாகங்களின் நஞ்சு என்பதற்கு இப்படி ஒரு அர்த்தம் அளிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. நஞ்சு என்றால் இப்படி ஒளிந்துகொண்டிருப்பதுதான்

அப்படிப்பார்த்தால் இந்நாவல் முழுக்க நாகம் என்று வந்துகொண்டிருப்பதை சப்கான்ஷியஸ்  என்று எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. நம் வரலாற்றின் சப்கான்ஷியஸ். ஒவ்வொரு மனிதனிலும் இருக்கும் சப்கான்ஷியஸ்

மகாதேவன்